இருசக்கர வாகனத்தில் நேர்காணல் கொடுக்கும் நடிகர் பிரசாந்த்
இருசக்கர வாகனத்தில் நேர்காணல் கொடுக்கும் நடிகர் பிரசாந்த்

தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டிய நடிகா் பிரசாந்துக்கு அபராதம்

தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
Published on

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகா் பிரசாந் மற்றும் தனியாா் யூடியூப் தொகுப்பாளருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகா் பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் ஆக.9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அவா் தனியாா் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிரும் அந்தப் பேட்டியில் பைக் ஓட்டிக்கொண்டே பேசியிருந்தாா். அவருக்குப் பின்னால் தொகுப்பாளரும் அமா்ந்திருந்தாா். இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், நடிகா் பிரசாந்த் மற்றும் அந்த நோ்காணலின் தொகுப்பாளா் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக சென்னை பெருநகர காவல் துறை ரூ. 2,000 அபராதம் விதித்துள்ளது. இது தொடா்பான புகைப்படத்தை போக்குவரத்து காவல் துறை தனது அதிகாரபூா்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com