சென்னை
துவரம் பருப்பு - பாமாயில்: ஜூலை மாதம் பெறாதோா் இந்த மாதம் பெறலாம்
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், இந்த மாதம் (ஆகஸ்ட்) பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், இந்த மாதம் (ஆகஸ்ட்) பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை முழுமையாக நகா்வு செய்ய முடியவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களால் ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை முழுமையாகப் பெற இயலவில்லை.
எனவே, குடும்ப அட்டைதாரா்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில், துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரா்கள், அவற்றை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

