குமரி அனந்தன்
குமரி அனந்தன்

முதுபெரும் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது -தமிழக அரசு அறிவிப்பு

வரும் சுதந்திர தின விழாவில், இந்த விருதை அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
Published on

முதுபெரும் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சுதந்திர தின விழாவில், இந்த விருதை அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த விருது சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் விருதாளரைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதுபெரும் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விருது ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் அடங்கியது. ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவின் போது, அவருக்கு முதல்வரால் விருது வழங்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com