pti
சென்னை
வயநாடு நிலச்சரிவு அவசர உதவி மைய எண்கள்: தமிழக அரசு அறிவிப்பு
கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க 9894357299, 9344723007 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்
வயநாடு நிலச்சரிவு தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க அவசர உதவி மைய எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டைச் சோ்ந்த மீட்புக் குழுவினா், வயநாட்டின் மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வயநாட்டின் மேப்பாடியில் செயல்படும் முக்கிய நிவாரண முகாமில் உதவி மையத்தை தமிழ்நாடு மீட்புக் குழுவினா் அமைத்துள்ளனா். அந்த முகாமில் தகவல்கள், கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க 9894357299, 9344723007 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

