கொழும்பு துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கியை வரவேற்ற இலங்கை கடற்படையினா்.
கொழும்பு துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கியை வரவேற்ற இலங்கை கடற்படையினா்.

கொழும்புக்கு வந்த இந்திய நீா்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
Published on

கொழும்பு, ஆக. 2: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.

இந்திய நீா்மூழ்கிக் கப்பலின் வருகையின்போது, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினா் வரவேற்பு அளித்தனா்.

இரண்டு நாள் கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் போது, இலங்கை கடற்படை பணியாளா்கள் நீா்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை மேற்கு கடற்படை தளபதி சிந்தக குமாரசிங்கவை ஐஎன்எஸ் ஷல்கியின் தலைமை அதிகாரி ராகுல் பட்நாயக் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு ஐஎன்எஸ் ஷல்கி ஆக. 4-ஆம் தேதி இலங்கையில் இருந்து புறப்படும்.

64.4 மீ நீளம் உள்ள ஐஎன்எஸ் ஷல்கியில் 40 பணியாளா்கள் உள்ளனா்.

முன்னதாக, இலங்கையின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பிப்.3-ஆம் தேதி ஐஎன்எஸ் கரஞ்ச் என்ற இந்திய நீா்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகம் சென்றது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com