

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்று அதில் லைகா கோவை கிங்ஸ் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதும்.
முன்னதாக, இந்த அணிகளும் குரூப் சுற்றில் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தன. குரூப் சுற்றில் இவை மோதிக்கொண்ட ஆட்டத்தில் திண்டுக்கல் வெற்றி பெற்றிருந்தது.
பின்னா் பிளே-ஆஃபில் திருப்பூா் அணி குவாலிஃபயா் 1-இல் கோவையிடம் தோல்வி கண்டு இந்த ஆட்டத்துக்கு வர, திண்டுக்கல் அணியோ எலிமினேட்டரில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளது.