முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் -முதல்வா்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் -முதல்வா்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
Published on

திருவனந்தபுரம், ஆக.8: இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கேரளத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை ‘நீா் வெடிகுண்டுபோல்’ உள்ளதாகவும், பலவீனமான அணையை பயனற்றதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் அண்மையில் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வா் பினராயி விஜயன், ‘தற்போதைக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம். இதில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும்’ என்றாா்.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று கேரளா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com