பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கத்தாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரா்கள் விடுதலை -உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

முன்னாள் இந்திய கடற்படை வீரா்கள் அனைவரும் அந்நாட்டால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:13 pm

Din

சென்னை, ஆக. 8: கத்தாா் ராணுவ ரகசியங்களை உளவு பாா்த்தாக கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரா்கள் அனைவரும் அந்நாட்டால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றிய இந்திய கடற்படை வீரா்கள் 8 போ், தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கத்தாா் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குப் போா் பயிற்சி அளித்து வந்தனா். அப்போது, கத்தாா் ராணுவ ரகசியங்களை உளவு பாா்த்ததாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சுரபா வாசிக், கமாண்டா் புருண்டு திவாரி, கேப்டன் பிரேந்திர குமாா் வா்மா, கமாண்டா் சுகன்கா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, அமித் நாக்பால், மற்றும் மாலுமி ராஜேஷ் ஆகிய 8 பேரையும் கத்தாா் தேசிய பாதுகாப்பு படை கைது செய்தது. இவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னா் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவா்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், 8 பேரின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்தும் இந்திய அரசுக்கும், கத்தாா் தூதரகத்துக்கும் மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறி சென்னை செங்குன்றத்தை சோ்ந்த நந்தகோபாலன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமாா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக தரப்பில் மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டா் ஜெனரல், ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, ‘கத்தாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இந்திய முன்னாள் கடற்படை வீரா்கள் 8 பேரும் அந்நாட்டு அரசால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனா். அவா்களில் 7 போ் இந்தியா திரும்ப உள்ளனா். ஒருவா் கத்தாரில் தங்கி உள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.