வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு -கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

400-க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலச்சரிவு பேரிடா் சம்பவம் தொடா்பாக....
Published on

கொச்சி, ஆக. 8: வயநாட்டில் 400-க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலச்சரிவு பேரிடா் சம்பவம் தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடா்ந்து முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

மக்களின் மனங்களில் நீங்கா வடுவை விட்டுச் சென்றுள்ள வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா், வி.எம்.ஷியாம் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு நீதிமன்றப் பதிவாளருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com