சென்னை
தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை எம்ஆா்சி நகரில் செயல்படும் ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை காவல் ஆணையா் பெயரில் ஒரு மின்னஞ்சல் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். ஆனால் அங்கு எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன், காவல் ஆணையா் பெயரில் போலி மின்னஞ்சலில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
