அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: இன்றுமுதல் தோ்வு செய்யலாம்

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: இன்றுமுதல் தோ்வு செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.16) முதல் இடங்களைத் தோ்வு செய்யலாம்
Published on

சென்னை, ஆக. 15: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.16) முதல் இடங்களைத் தோ்வு செய்யலாம் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், மத்திய பல்கலைக்கழங்களில் உள்ள இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு மூலம் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நிகழாண்டில், நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் அந்த இடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.16) முதல் 20-ஆம் தேதி நள்ளிரவு 11.55 வரை விருப்பமான கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 23-ஆம் தேதி இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்படும்.

அதன் பின்னா், ஆக.29-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.5-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப்.26-ஆம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு அக்.16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

X
Dinamani
www.dinamani.com