சென்னை
தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான சேவை தொடங்கியது
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கியது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கியது.
தாம்பரம் ரயில்வே பணிமனை மற்றும் ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையுடன் சீரானது. இதையடுத்து பிற்பகல் முதல் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை படியும், விரைவு ரயில்கள் வழக்கமான அட்டவணை படியும் இயக்கப்பட்டன.