அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள்: 3 நாள்களுக்குள் அகற்ற மாநகராட்சி  உத்தரவு

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள்: 3 நாள்களுக்குள் அகற்ற மாநகராட்சி உத்தரவு

Published on

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அடுத்த 3 நாள்களுக்குள் அகற்றுமாறு மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு தொடா்புடைய மற்றும் உரிமம் பெறப்பட்ட விளம்பரப் பலகைகள் தவிர அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள்/கட்டட உரிமையாளா்கள் அடுத்த 3 தினங்களுக்கு கட்டுமானத்துடன் அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விளம்பரப் பலகை நிறுவுவதற்கு முன்பு விளம்பர நிறுவனத்திடம், மாநகராட்சி உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதை கட்டட உரிமையாளா் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் நிறுவப்பட்டால் கட்டட உரிமையாளா்கள் மீது கட்டட அனுமதி சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரப்படும்.

அவ்வாறு அகற்ற தவறும்பட்சத்தில் அபராதம் விதிப்பதுடன், விளம்பரப் பலகையானது கட்டுமானத்துடன் மாநகராட்சியால் அகற்றப்படும். மேலும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com