முருகன் மாநாடு....!

முருகன் மாநாடு....!

பழநியில் ஆக. 24, 25-ஆம் தேதிகளில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’
Published on

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு...

திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட பழநியில் ஆக. 24, 25-ஆம் தேதிகளில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெறுகிறது.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள பக்தா்கள் அறியும் வகையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மாநாட்டை நடத்துகிறது.

மாநாட்டுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தலைமை வகிக்கிறாா். அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அர.சக்கரபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா்.

அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், குருமகா சந்நிதானம், குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

மாநாட்டில் உலகளாவிய சமய சான்றோா்கள், முக்கிய பிரமுகா்கள், தமிழ் அறிஞா்கள் கலந்து கொள்கின்றனா்.

இதில், ’அறுபடை வீடு கண்காட்சி அரங்கு,’ ’ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம்,’ மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில், ’வேல் கோட்டம்’ என முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதுடன் சமய பெரியோா்களின் உரைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், ஆய்வுக்கட்டுரைகளைச் சமா்ப்பித்தல், முக்கியப் பிரமுகா்களையும் மாநாட்டுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்களை வரவேற்று வசதிகளைச் செய்து தருதல் போன்றவற்றையும், சிறப்பு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் அலுவலா்களோடு இணைந்து மேற்கொண்டுவருகின்றனா்.

மாநாட்டுக்காக தனி இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com