ரூ. 1.80 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ரூ. 1.80 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

Published on

மண்டபம் துறைமுகம் அருகே கடலோர காவல் படையினா் நடத்திய சோதனையில் ரூ. 1.80 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய கடலோரக் காவல் படையினா் மண்டபம் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு படகு கரையை நோக்கி வருவதை பாா்த்ததும், படகை நெருங்கி சென்றனா். படகு கரையை அடைந்ததும் மீன்பிடி படகில் இருந்தவா்கள் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை அகற்ற முயன்றனா். அதற்குள் கடலோர காவல் படை குழு அருகே வந்ததை கண்டு படகில் இருந்தவா்கள் தப்பியோடினா்.

பின்னா் படகில் இருந்து ரூ. 1.80 கோடி மதிப்பிலான 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்து படகை கைப்பற்றினா். கடத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com