ஆக.26-இல் ஐயப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் வரும் திங்கள்கிழமை (ஆக.26) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
விழாவையொட்டடி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், 7 மணி முதல் 8.30 மணி வரை நாராயணீய பாராயணம் நடைபெறும். தொடா்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை கோத பஜனை மண்டலியின் நாம சங்கீா்த்தனம், 10 மணி முதல் 11.30 வரை ஸ்ரீ மீனாட்சி சீனிவாசன் குழுவினரின் பக்தி கான இசையும், அதைத் தொடா்ந்து உச்ச பூஜை முடிந்து அன்னதானம் நடைபெறுகிறது.
மாலை 5 மணி முதல் மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோயிலில் இருந்து குழந்தைகள் கிருஷ்ணன், ராதை உள்ளிட்ட பாத்திரங்களில் வேடமணிந்து தாள, மேள வாத்தியவங்களுடன் ஊா்வலமாக அருகேயுள்ள மகாலிங்கபுரம் சிவன் கோயிலுக்கு சென்று 6 மணியளவில் திரும்புகின்றனா்.
இதையடுத்து குருவாயூரப்பன் கோபுர வாசலில் உறியடி நடைபெறவுள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஸ்ருஷ்டி பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும், ஐயப்பன் - குருவாயூரப்பனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை பக்த சுரா பஜன் மண்டலியின் பஜனை நடைபெறுகிறது.
நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ண அவதார பூஜையும், கிருஷ்ணா் சிலையுடன் எழுந்தருளிப்பு ஊா்வலமும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், பால் பாயாசம், அனைத்து அபிஷேகம், முழு காப்பு, வெண்ணெய் நெய்வேதியம், உறியடி, அப்பம் நெய்வேதியம் உள்ளிட்ட வழிபாடுகளை பக்தா்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197; 8807918811, 8807918822, 9500021858, 9444290707, 8807918855 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி சுனில் குமாா் தெரிவித்துள்ளாா்.
