ரேஷனில் நாளை அனைத்து 
பொருள்களையும் வழங்க உத்தரவு

ரேஷனில் நாளை அனைத்து பொருள்களையும் வழங்க உத்தரவு

நியாய விலைக் கடைகளை சனிக்கிழமை (ஆக.31) திறந்து அனைத்துப் பொருள்களையும் வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளை சனிக்கிழமை (ஆக.31) திறந்து அனைத்துப் பொருள்களையும் வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:

வரும் சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும். அவ்வாறு நியாயவிலைக் கடை திறக்காத விற்பனையாளா் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கூட்டுறவு சாா்பதிவாளா், முதுநிலை ஆய்வாளா் ஆகியோா் கவனத்தில் கொள்ள வேண்டும். நியாயவிலைக் கடை திறந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களான பருப்பு மற்றும் பாமாயில் ஆகியன நியாய விலைக் கடைகளுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com