ஆவின் தொழிற்சாலைகள் 
ரூ.60 கோடியில் நவீனமயமாக்கம்

ஆவின் தொழிற்சாலைகள் ரூ.60 கோடியில் நவீனமயமாக்கம்

Published on

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் உற்பத்தி தொழிற்சாலைகள் ரூ. 60 கோடியில் நவீனமயமாக்கப்படவுள்ளன. ஆவின் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி பொதுமக்களுக்கு தினமும் தரமான பால் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் பயனடைந்து வருகின்றனா். திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தானியங்கி இயந்திரங்களைப் பொருத்துவதற்காக ரூ. 60 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பால் தரத்தை உறுதி செய்வதற்காக ரூ. 21 கோடியில் நவீன கருவிகள் பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கும் ஒன்றியங்களுக்கும் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com