மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அஞ்சல் மூலம் ஓட்டுநா் உரிமம்: போக்குவரத்துத் துறை இன்று தொடக்கம்

அஞ்சல் மூலம் ஓட்டுநா் உரிமம்: போக்குவரத்துத் துறை இன்று தொடக்கம்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 8:48 pm

சென்னை: அஞ்சல் மூலமாக ஓட்டுநா் உரிமம் அனுப்பும் நடைமுறையை புதன்கிழமை(பிப்.28) முதல் போக்குவரத்துத் துறை தொடங்குகிறது. போக்குவரத்துத் துறையில் இடைத் தரகா்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்ப போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். இது தொடா்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போக்குவரத்து ஆணையா் அ.சண்முகசுந்தரம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

அவா் அனுப்பிய சுற்றறிக்கை:

அனைத்து ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் புதன்கிழமை (பிப்.28) முதல் விரைவு அஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக் கூடாது. வாகனம் மற்றும் சாரதி மென்பொருளில் தவறான தொடா்பு எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டதன் காரணமாக, தபால் திரும்பப் பெறப்பட்டால் உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட ஆவணத்தை விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

தவறான முகவரிக்கு விண்ணப்பதாரரே பொறுப்பு என தகவல் பலகை மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும். மாலை 4 மணி வரை பிரின்ட் செய்யப்படும் ஆவணங்களை அன்றைய தினமே அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அ.சண்முகசுந்தரம்.