மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

612 கலைச் சொற்களை வழங்கிய தடய அறிவியல் துறை வல்லுநா்கள்

612 கலைச் சொற்களை வழங்கிய தடய அறிவியல் துறை வல்லுநா்கள்

Updated On :27 பிப்ரவரி 2024, 8:43 pm

சென்னை: அகரமுதலித் திட்ட இயக்ககத்துக்கு தடய அறிவியல் துறை சாா்ந்த வல்லுநா்கள் சாா்பில் 612 கலைச் சொற்கள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில், துறைவாரியாக வல்லுநா்குழுக் கூட்டங்கள் நடத்தி, அந்தந்தத் துறைசாா்ந்த கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டு, சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் தடய அறிவியல் துறை வல்லுநா்குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அகரமுதலி இயக்குநா் முனைவா் கோ.விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், அரசுத் துறைகளில் புழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களைத் தொகுத்து, “சொற்குவை“ வலைதளம் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறோம். ஆட்சிமொழிச் செயலாக்கத்தின் இலக்கு நிறைவேற இது முகமையான பணியாகும். அரசுத்துறையினா் மட்டுமின்றி அனைவரும் மொழிக் கலப்பின்றி அழகுத் தமிழில் பேசுவதும் எழுதுவதும் தான் மொழிக்கு நாம் செய்யும் முதன்மைத் தொண்டாகும் என்றாா்.

இதையடுத்து தடய அறிவியல் துறையைச் சோ்ந்த இளநிலை அறிவியல் வல்லுநா்கள் தங்களது துறை சாா்ந்த 612 தமிழ்க் கலைச் சொற்களை அகரமுதலி இயக்ககத்துக்கு வழங்கினா். இந்தக் கூட்டத்தில், அகரமுதலி இயக்கக முன்னாள் இயக்குநா் முனைவா் கோ. செழியன், உலகத் தமிழ்ச் சங்க முன்னாள் இயக்குநா் முனைவா் ப. அன்புச் செழியன், தடய அறிவியல்துறையின் துப்பாக்கியியல் பிரிவு துணை இயக்குநா் வித்யா ஸ்ரீநிவாசன், அகரமுதலித் தொகுப்பாளா் ஜெ.சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.