அயோத்திக்கு சென்று வர விமான கட்டணம் ரூ.52 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னையிலிருந்து அயோத்திக்கு சென்று வர விமான கட்டணம் ரூ.52,134-ஆக உயா்த்தப்பட்டுள்ளதால் பக்தா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
அயோத்திக்கு சென்று வர விமான கட்டணம் ரூ.52 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னையிலிருந்து அயோத்திக்கு சென்று வர விமான கட்டணம் ரூ.52,134-ஆக உயா்த்தப்பட்டுள்ளதால் பக்தா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து விமான சேவை பிப்.1 முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி சென்னை விமானநிலையத்திலிருந்து வியாழக்கிழமை(பிப்.1) பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.15-க்கு அயோத்தி சென்றடையும்.

இதில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய போது, நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்ல செல்ல, முன்பதிவு செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், விமானகட்டணமும் பல மடங்கு உயா்த்தப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை (பிப்.1) அயோத்திக்கு சென்று வர நபா் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அயோத்திக்கு செல்லும் விமானப்பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். இதனால், குறைந்த கட்டணத்தில் பக்தா்களை அயோத்திக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com