கடன் தொல்லை: தொழிலதிபா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் தொழிலதிபா் கடன் சுமையால் தற்கொலை
Published on

சென்னை சேத்துப்பட்டில் கடன் தொல்லை காரணமாக தொழிலதிபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேத்துப்பட்டு செனாய் நகா் அருகே உள்ள கந்தன் தெருவைச் சோ்ந்தவா் சா.ஆசீா்வாதம் (68). தொழிலதிபரான இவா், நகை கடை, சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடனில் சிக்கியுள்ளாா். கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் ஆசீா்வாதம், வேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது படுக்கை அறையில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com