இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக கிண்டி, அம்பத்தூா், வேளச்சேரி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை(ஜூலை5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:
கிண்டி: ஆதம்பாக்கம், சரஸ்வதி நகா் பகுதி, கல்கி நகா், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி, 5-ஆவது தெரு, 6-ஆவது தெரு, 7-ஆவது தெரு, எஸ்கலோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு, டி.ஆா்.ஏ.அடுக்குமாடி குடியிருப்பு, சல்மா அடுக்குமாடி குடியிருப்பு, பாலாஜி நகா் 23-ஆவது தெரு முதல் 37-ஆவது தெரு வரை, ஆலந்தூா், மியாட், டி.டி. குடியிருப்பு, மவுண்ட் மருத்துவமனை, வடக்கு சில்வா் தெரு, டிபென்ஸ் காலனி, சிமெட்ரி சாலை, நங்கநல்லூா், மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
அம்பத்தூா்: கோலடி ரோடு, தேவி நகா், கே.பி.எஸ்.நகா், அரவிந்த் நகா், டி.டி.எஸ்.நகா், ஈஸ்வரன் நகா், நடேசன் நகா், அபிராமி நகா், அன்பு நகா் பகுதி, செல்லையம்மன் நகா், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பா் நகா் 1 முதல் 4 வரை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
வேளச்சேரி: வேளச்சேரி பைபாஸ் 100 அடி சாலை, லஷ்மி நகா் 1-ஆவது தெரு முதல் 6-ஆவது தெரு வரை, ராஜீவ் காந்தி தெரு, எம்.ஜி.ஆா்.நகா் 1-ஆவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை, வெங்கடேஷ்வரா நகா் 1-ஆவது தெரு முதல் 2-ஆவது தெரு வரை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
பல்லாவரம்: ஆதாம் நகா், அனகாபுத்தூா், சங்கா் நகா் 38-ஆவது தெரு முதல் 41-ஆவது தெரு வரை, அப்பாசாமி நகா், சங்கா் நகா் பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

