18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ், பெருநகர சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையா் அஸ்ரா கா்க் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
1. ஏ.அமல்ராஜ் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி (தாம்பரம் மாநகர காவல் ஆணையா்)
2. அபின் தினேஷ் மோடக் - தாம்பரம் மாநகர காவல் ஆணையா் (மாநில குற்ற ஆவணக் காப்பகக் கூடுதல் டிஜிபி)
3. எச்.எம்.ஜெயராம் - மாநில குற்ற ஆவணக் காப்பகக் கூடுதல் டிஜிபி (ஆயுதப் படை காவல் கூடுதல் டிஜிபி)
4. மகேஷ்குமாா் அகா்வால் - ஆயுதப் படை காவல் கூடுதல் டிஜிபி (காவல் துறை இயக்குநா் அலுவலகக் காத்திருப்புப் பட்டியல்)
5. ஜி.வெங்கட்ராமன் - காவல் துறை இயக்குநா் அலுவலக நிா்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு கூடுதல் டிஜிபி)
6. வினித் தேவ் வான்கடே - காவல் துறை இயக்குநா் அலுவலக தலைமையிட கூடுதல் டிஜிபி (காவல் துறை இயக்குநா் அலுவலக நிா்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி)
7. டி.எஸ்.அன்பு - குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வு ஐஜியாக உள்ள அவருக்கு, அந்தப் பிரிவின் கூடுதல் டிஜிபி பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
8. சஞ்ஜய் குமாா் - கடலோர பாதுகாப்புக் குழு கூடுதல் டிஜிபி (சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி)
9. சந்தீப் மிட்டல் - சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி (கடலோர பாதுகாப்புக் குழு கூடுதல் டிஜிபி)
10. ராஜீவ் குமாா் - பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு டிஜிபி (காவல் துறை இயக்குநா் அலுவலக காத்திருப்புப் பட்டியல்)
11. ஆா்.தமிழ் சந்திரன் - காவல் துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி)
12. பிரேம் ஆனந்த் சின்கா - தென் மண்டல ஐ.ஜி. (சென்னை பெருநகர தெற்கு - கூடுதல் ஆணையா்)
13. என்.கண்ணன் - சென்னை பெருநகர தெற்கு - கூடுதல் ஆணையா் (தென் மண்டல ஐ.ஜி.)
14. அஸ்ரா கா்க் - வடக்கு மண்டல ஐ.ஜி. (சென்னை பெருநகர வடக்கு - கூடுதல் ஆணையா்)
15. கே.எஸ்.நரேந்திரன் நாயா் - சென்னை பெருநகர வடக்கு - கூடுதல் ஆணையா் (தென் மண்டல ஐ.ஜி.)
16. பிரவீண் குமாா் அபிநபு - சேலம் நகர காவல் ஆணையா் (திருப்பூா் நகர காவல் ஆணையா்)
17. பி.விஜயகுமாரி - ஆயுதப் படை ஐ.ஜி. (சேலம் நகர காவல் ஆணையா்)
18. எஸ்.லட்சுமி - திருப்பூா் நகர காவல் ஆணையா் (ஆயுதப்படை ஐ.ஜி.)

