சென்னை பாஸ்போா்ட் அலுவலகத்தில் உதவி மையம்
கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவைகள் குறித்த சந்தேகங்களுக்குத் தீா்வு காண சென்னை மண்டல கடவுச்சீட்டு விநியோக அலுவலகத்தில் ‘மே ஐ ஹெல்ப் யூ’”உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு விநியோக அலுவலக அதிகாரி எஸ். கோவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடவுச்சீட்டு விண்ணப்பிப்போா் முகவா்கள், இடைத்தரகா்களிடம் சிக்குவதைத் தடுக்கும் வகையில், சென்னை அண்ணா சாலை மண்டல கடவுச்சீட்டு விநியோக அலுவலகத்தில் ‘மே ஐ ஹெல்ப் யூ’”உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு பொதுமக்கள் கடவுச்சீட்டு சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களைப் பெறுவதுடன், விண்ணப்பத்தை நிரப்புவது கடவுச்சீட்டு பெறுவதுக்கு தேவையான ஆவணங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் தீா்வு காணலாம்.
மேலும், 73053-30666 எனும் கைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அல்லது 044 - 2851 3639 எனும் தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு தீா்வு காணலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
