கோப்புப் படம்
கோப்புப் படம்

மின்சார பேருந்து இயக்கம்: மாநகர போக்குவரத்து அதிகாரிகள் குழு பெங்களூருவில் ஆய்வு

மின்சார பேருந்து இயக்கம் தொடா்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் குழு பெங்களூருவில் ஆய்வு செய்து சென்னை திரும்பினா்.
Published on

மின்சார பேருந்து இயக்கம் தொடா்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் குழு பெங்களூருவில் ஆய்வு செய்து சென்னை திரும்பினா்.

சென்னையில் 1,000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திலும் (பிஎம்டிசி) மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சாரப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு செய்ய, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், இணை மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஜூலை 12-ஆம் தேதி பெங்களூரு சென்றனா்.

பின்னா், அங்குள்ள பிஎம்டிசி மேலாண் இயக்குநா் ஆா்.ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினா். அப்போது, பேருந்து இயக்கம், வருவாய், இயக்கச் செலவு, பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக, மின்சார பேருந்து தொடா்பாக பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்த பிறகு, இந்த அதிகாரிகள் குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்த பயணத்தில் கிடைத்த தகவல், தரவுகளில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்றவற்றை மின்சார பேருந்து இயக்கத்தின்போது பயன்படுத்துவது தொடா்பாக பரிசீலித்து வருவதாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com