கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தடயவியல் துறையிடம் கைப்பேசிகள் ஒப்படைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை தடயவியல் துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை தடயவியல் துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் 4 கைப்பேசிகளை, திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரைச் சோ்ந்த ஹரிதரன் என்பவரிடம் வழக்குரைஞா் அருள், கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரிதரனை போலீஸாா் கைது செய்து, நடத்திய விசாரணையில், அருள் கொடுத்த 3 கைப்பேசிகளை உடைத்து திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூா் கொசஸ்தலை ஆற்றில் வீசியது தெரிவந்தது.

இதையடுத்து ஆழ்கடல் நீச்சல் வீரா்கள் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றில் காவல் துறையினா் நடத்திய தேடுதலில் 3 கைப்பேசிகளின் உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், ஒரு கைப்பேசியின் உதிரிபாகங்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, தடயவியல் துறையிடம் ஒப்படைத்தனா். அவற்றை தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆந்திர சென்ற தனிப்படை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய சில முக்கிய குற்றவாளிகள், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவா்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவா்கள் கைது செய்யப்பட்டால், கொலை தொடா்பான பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com