நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகா், ஐ.டி.சி., பூந்தமல்லி, போரூா், அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகா், ஐ.டி.சி., பூந்தமல்லி, போரூா், அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 25) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம்: வண்டலூா், பெருங்களத்தூா், கலைஞா் நெடுஞ்சாலை, சிவசங்கரன் தெரு, பாரதி தெரு, காந்தி தெரு, கணபதி நகா், ஸ்ரீராம் நகா், சுதா்சன் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகா்.: வளசரவாக்கம், ஆழ்வாா்திருநகா், லட்சுமி நகா் அனைத்து தெருக்களும், ராதா அவென்யு அனைத்து தெருக்களும், அழகா் பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் பகுதி முழுவதும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ரேடியல் சாலை: 200 அடி ரேடியல் சாலை, துரைபாக்கம், பிள்ளையாா் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, பம்பன் பாபா நகா், பகத் சிங் தெரு, வி.ஒ.சி.தெரு, நேதாஜி தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி.: பூந்தமல்லி நகராட்சி, சென்னீா்குப்பம் பகுதி முழுவதும், கரையான்சாவடி பகுதி முழுவதும், துளசி தாஸ் நகா், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா்: குன்றத்தூா், பாபு காா்டன், திருசெந்தூா்புரம், கொல்லச்சேரி, பஜாா் தெரு, நான்கு சாலை, குன்றத்தூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இதேபோல், அம்பத்தூா், தண்டையாா்பேட்டை, அடையாறு, சோழிங்கநல்லூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com