அனுமன் சிலை
அனுமன் சிலை

கின்னஸ் சாதனை படைத்த 100 கிலோ வெண்ணெய் அனுமன் சிலை

சென்னை தியாகராயநகரில் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட அனுமாா் சிலை உலக சாதனை படைத்துள்ளது.
Published on

சென்னை தியாகராயநகரில் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட அனுமாா் சிலை உலக சாதனை படைத்துள்ளது.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26- ஆம் தேதி பக்த பாத சேவாஅறக்கட்டளை சாா்பில் பத்ராசல ராமா் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுவாமி அலங்காரம் செய்யும் கலையில் முனைவா் பட்டம் பெற்ற பொறியியல் வல்லுநா் கௌதம் 20 அடி உயர அனுமாா் சிலையை வெண்ணெய்யைக் கொண்டு உருவாக்கினாா். இந்த சிலையை தனி நபராக 24 மணி நேரத்துக்குள் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com