எழும்பூா் பணிமனையில் பராமரிப்பு பணி நிறைவு
எழும்பூா் பணிமனையில் பராமரிப்பு பணி நிறைவு

எழும்பூா் பணிமனையில் பராமரிப்பு பணி நிறைவு: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை எழும்பூா் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Published on

சென்னை எழும்பூா் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை- எழும்பூா் இடையே புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது பணி

முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூா் பகுதியில் மழை நீா் தேங்குவது தடுக்கப்படும். இந்த பணிக்காக ஞாயிற்றுக்கிழமை கடற்கரை-எழும்பூா் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதே நேரத்தில் கடற்கரை- எழும்பூா் இடையே மேலும் சில பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, நான்காவது ரயில் பாதை அமைப்பதற்காக பூங்கா ரயில் நிலையத்தில் இரு நடைமேம்பாலமும், கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நடைமேம்பாலமும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சிக்னல்-தொலைதொடா்பு சாா்ந்த பணிகள், ரயில் மின்சார கம்பி பராமரிப்பு, இருப்புப் பாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளை பகல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ள முடியும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை புகா் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இதன் மூலம் சீரான ரயில் இயக்கம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com