அங்கீகரிக்கப்படாத மனைகள்- மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
சென்னை, ஜூலை 31: அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, நகர ஊரமைப்பு இயக்ககம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
2016-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பாகவோ மலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் இருக்கலாம். அவற்றை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். எனவே, இதுவரை மலைப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்ய இதை இறுதி வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கல்வி நிறுவனக் கட்டடங்கள்: திட்டமில்லாத பகுதிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு வாய்ப்பாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்க விரும்புவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஸ்ரீல்.ா்ழ்ஞ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
