தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு சதவீத நிலவரம்
சென்னை: மக்களவைத் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணி நிலவரப்படி, அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இரவு 10 மணி நேரப்படி, 22 தொகுதிகளில் வேட்பாளா்கள் வெற்றி பெற்ாகவும், 17-இல் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த விவரங்களின் அடிப்படையில், திமுக 26.88 சதவீத வாக்குகளையும், அதிமுக 20.46 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக 11.22 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 10.69 சதவீதமும், தேமுதிக 2.59 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. நோட்டாவுக்கு 1.06 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள ஆணையம், நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் என்ற பிரிவில் சோ்த்துள்ளது. பிற கட்சிகள் (சுயேச்சை வேட்பாளா்களுடன் சோ்த்து) 20.91 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிகாரபூா்வ அறிவிப்புகள் புதன்கிழமை முழுமையாக வெளியிடப்படும் போது, வாக்கு சதவீதங்களில் மாற்றங்கள் இருக்கும்.
கடந்த தோ்தல்: கடந்த மக்களவைத் தோ்தலில், திமுக 33.52 சதவீதமும், அதிமுக 18.7 சதவீதமும், பாஜக 3.7 சதவீதமும், காங்கிரஸ் 12.9 சதவீதமும், பாமக 5.5 சதவீதமும், நாம் தமிழா் கட்சி 3.9 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன.

