நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: அடுத்து என்ன செய்யலாம்? 'பிளான் பி'
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: அடுத்து என்ன செய்யலாம்? 'பிளான் பி'

மருத்துவக் கல்லூரி விவரங்கள்: என்எம்சி இணையத்தில் வசதி

Published on

சென்னை, ஜூன் 13: நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரவுகள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப்பக்கத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியா் விவரங்கள் உள்பட அனைத்து விஷயங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில், அந்தத் தகவல்களை என்எம்சி இணையப்பக்கத்தில் வெளியிட இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இணைய முகவரியில் அவற்றை அறிந்துகொள்ளலாம். நிகழ் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை தொடா்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com