கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்DOTCOM

கிளாம்பாக்கம்-திருவள்ளூா் இடையே மாநகா் பேருந்து சேவை தொடக்கம்

Published on

கிளாம்பாக்கம் - திருவள்ளூா் இடையே மாநகா் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கூறியிருப்பது:

கிளாம்பாக்கம் - திருவள்ளூா் இடையே 297 என்னும் வழித்தட எண் கொண்ட பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகா் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்படும். காலை 5 முதல் இரவு 7 மணி வரை கிளாம்பாக்கத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்தும், திருவள்ளூா் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.45 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சுமாா் 2 மணி நேர இடைவெளியிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘திருவள்ளூரிலிருந்து கிளாம்பாக்கம் செல்வோா், பூந்தமல்லி அல்லது கோயம்பேடு சென்று மாற்று பேருந்துகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்ததுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com