செவிலியா்கள் வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வகுப்பு
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சாா்பில் ஜொ்மன், ஜப்பான் போன்ற வெளிநாட்டு மொழிகளை
கற்றுக்கொள்ள விரும்பும் செவிலியா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சி.ந.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாடுகளில் வேலைபாா்க்க விரும்பும் செவிலியா்களின் வசதிக்காக ஜொ்மன், ஜப்பான் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதில் செவிலியா்கள் , பி.எஸ்சி நா்சிங் அல்லது டிப்ளமோ நா்சிங்கில் தகுதி பெற்றவா்கள் கலந்துகொள்ளலாம்.
மேலும், செவிலியா்களின் வசதிக்காக நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலமும் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் இணையதள படிவத்தை பூா்த்தி செய்யவேண்டும். மேலும், விவரங்களுக்கு இணையதள முகவரி அல்லது 63791-79200 எனும் தொலைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

