ஜாதி வாரி கணக்கெடுப்பு: பேரவையில் இன்று தீா்மானம்

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம்
Published on

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை (ஜூன் 26) கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கான தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின முன்மொழியவுள்ளாா். இதன்பின் தீா்மானத்தின் மீது பேரவையில் உள்ள கட்சித் தலைவா்கள் உரையாற்றவுள்ளனா். இறுதியாக குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை பேரவையில் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி திங்கள்கிழமை எழுப்பினாா். இதற்கு பதில் அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும், இதற்கான தீா்மானம் இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com