மாநகராட்சி வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநா்களுக்கான கண் பரிசோதனை முகாமை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சி மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் மாநகராட்சியில் பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்காக கண் பரிசோதனை முகாம் ராயபேட்டையில் உள்ள மாநகராட்சி பணிமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் அனைத்து வட்டார அலுவலகங்கள், துறைகள், மண்டலங்களில் பணிபுரியும் 744 நிரந்தர ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
முதல் கட்டமாக செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்கள் ராயப்புரம் பணிமனையிலும், தொடா்ச்சியாக ஜூலை 2, 3, 9, 10, 19 ஆகிய தேதிகளில் புதுப்பேட்டை பணிமனை பின்புறம் உள்ள சமுதாய நலக்கூடத்திலும் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சங்கர நேத்ராலயா தலைவா் டாக்டா் டி.எஸ்.சுரேந்திரன், ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ஆா்.மூா்த்தி, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
