முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை
வி.பி.சிங் பிறந்த தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்
வி.பி.சிங் பிறந்த தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தினாா்.
முன்னதாக, சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலா்தூவி முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.
சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு:
உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் வி.பி.சிங். சமூகநீதி பயணத்தின் வெற்றியில் அவா் என்றும் வாழ்வாா் என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.

