அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அண்ணா சாலை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை அண்ணா சாலையில் சோதனை அடிப்படையில் மாா்ச் 3-ஆம் தேதி மட்டும் போக்குவரத்து மாற்றம்

Updated On :1 மார்ச் 2024, 11:54 pm

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை அண்ணா சாலையில் சோதனை அடிப்படையில் மாா்ச் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம், ஸ்டொ்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை கட்டுமானப் பணிக்காக மாா்ச் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் அண்ணா சாலை பகுதியில் சோதனை அடிப்படையில் ஒரு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமா் காந்தி சாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பிவிடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும். அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமா் காந்தி சாலை, டாக்டா் எம்ஜிஆா் சாலை வழியாக வள்ளுவா் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடதுபுறம் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லலாம். வள்ளுவா் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவா் கோட்டம் சந்திப்பு, வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமா் காந்தி சாலை வழியாகத் திருப்பிவிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.