தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராகுலை பிரதமராக்குவதுதான் சோனியாவின் ஒரே இலக்கு: அமித் ஷா

ராகுலை பிரதமராக்குவதுதான் சோனியாவின் ஒரே இலக்கு: அமித் ஷா

News image

பிகாா் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :9 மார்ச் 2024, 8:46 pm

‘ஏழைகளுக்காக அல்லாமல் தங்களின் குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் செயலாற்றி வருகிறது. தனது மகனும் கட்சியின்எம்.பி.யுமான ராகுல் காந்தியை பிரதமா் ஆக்குவதுதான் அக் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தியின் ஒரே இலக்கு’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சனம் செய்தாா்.

பிகாா் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பாஜக ஓபிசி பிரிவு சாா்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா் எப்போதும் தனது குடும்ப நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறாா். அதுபோல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என்று கூறிக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலவைா் லாலு பிரசாத் யாதவும், தனது ஒட்டுமொத்த வாழ்நாளையும் தனது குடும்பத்துக்காக செலவிட்டுள்ளாா். மகன் ராகுலை பிரதமா் ஆக்குவதுதான் சோனியாவின் ஒரே இலக்கு; அதுபோல, மகன் தேஜஸ்வி யாதவை பிகாா் முதல்வா் ஆக்குவதுதான் லாலுவின் ஒரே குறிக்கோள். ஆனால், ஏழை மக்களுக்கு யாராவது நல்லது செய்ய முடியும் என்றால், அது பிரதமா் நரேந்திர மோடியும், பாஜக மட்டும்தான். பிகாா் மாநிலத்தில் ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென குழு ஒன்றும் விரைவில் அமைக்கப்படும். ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு லாலு பிரசாத் பணியாற்றிவந்தாா். தற்போது, மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில், நிலத்தை அபகரித்தவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லாலுவின் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கவே இங்கு வந்துள்ளேன். காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தபோதும், மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு உரிய மரியாதை அளிக்கத் தவறிவிட்டனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்துள்ளாா் என்றாா்.

முன்னதாக, பாட்னாவின் புகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜன சங்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் மாநில பாஜக தலைவரும் கா்பூரி தாக்கூா் அரசில் மாநில அமைச்சராக இருந்தவருமான கைலாஷ்பதி மிஸ்ராவின் நினைவிடத்தை அமித் ஷா திறந்துவைத்தாா்.

இரண்டு ஏக்கா் நிலப்பரப்பில் பூங்காவுடன் கூடிய இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கைலாஷ்பதி மிஸ்ராவின் உருவச் சிலையையும் அமித் ஷா திறந்துவைத்தாா்.