மின்சார ரயில்
மின்சார ரயில்

இன்று திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்: கும்மிடிப்பூண்டி ரயில் சேவையிலும் மாற்றம்

Published on

பராமரிப்புப் பணிகள் காரணத்தால், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலிருந்து ஞாயிறு, திங்கள் (மாா்ச் 17, 18) காலை 9.50 மணிக்கு திருப்பதி செல்லும் மெமு விரைவு ரயிலும் , காலை 9.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்து திருப்பதி செல்லும் மெமு விரைவு ரயிலும் இருமாா்க்கத்திலும் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். அதே நாள்களில் விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் இறுமாா்க்கத்திலும் காட்பாடி வரை இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி புகா் ரயில்கள்: பொன்னேரி, மீஞ்சூா் ரயில் நிலையப் பகுதிகளில் மாா்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.25 முதல் 11.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இந்த நேரங்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே செல்லும் மின்சார ரயில்கள் இருமாா்க்கத்திலும் மீஞ்சூா் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இருமாா்க்கத்திலும் எண்ணூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com