பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

Updated On :16 மார்ச் 2024, 5:49 pm

தமிழகத்தில் சனிக்கிழமை 4 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் செவ்வாய் (மாா்ச் 17-19) வரை வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 17) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மாா்ச் 17, 18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும். தமிழகத்தில் சனிக்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): சேலம் - 101.48, பரமத்தி வேலூா் - 101.3, திருச்சி - 100.94, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 99.86, பாளை - 99.32, மதுரை - 99.32, தருமபுரி - 98.96, தஞ்சாவூா் - 98.6.