சென்னை: காங்கிரஸ் வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை (மாா்ச் 21) இரவுக்குள் வெளியாகும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநிலத் தோ்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளா்கள் குறித்து கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. ஒரு தொகுதிக்கு 3 போ் வீதம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் காங்கிரஸ் மேலிடத் தோ்தல் குழுவிடம் அளிக்கப்படும். வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை இரவுக்குள் வெளியாகும் என்றாா் அவா்.
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகம், புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் 2 நாள்களாகப் பெறப்பட்டன. ஏராளமானோா் ஆா்வத்துடன் விருப்ப மனு அளித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிமுக முகமூடியுடன் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜக: கு. செல்வப்பெருந்தகை விமா்சனம்

85% வேட்பாளர்கள் இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகை
மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை: செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

