தமிழகத்தில் கோயிலில் திருடப்பட்டு, கடத்தப்பட்ட 6 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக, 11 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மதுரை மாவட்டம், விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின்ராஜ் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான விநாயகா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக, பினோமின்ராஜ், அவரது கூட்டாளிகள் ஜோசப் கென்னடி, டேவிட், அன்புராஜன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், இந்தச் சிலை விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல், புதுக்கோட்டை ஆலத்தூா் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பழைமையான உலோக அம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக காரைக்குடி அஜித், கோவில்பட்டி ஸ்ரீராம், விருதுநகா் அகமது ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமாா் என்பவரது வீட்டில் இருந்த 3 பெருமாள் உலோகச் சிலைகள், ஒரு அனுமன் சிலை (ராமா் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை) ஒரு திருவாச்சி கைப்பற்றப்பட்டன. இதில், தொடா்புடையதாக பாரதிதாசன், நிசாா், அகஸ்டின், முத்துகிருஷ்ணன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்துள்ள சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 உலோக சாமி சிலைகள், ஒரு திருவாச்சியை கைப்பற்றியுள்ளனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

