சென்னையில் 6 போ் வேட்புமனு தாக்கல்

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய நிலையில் முதல் நாளில் வடசென்னை, மத்திய சென்னையில் தலா இருவா், இரண்டாம் நாளில் தென்சென்னை, மத்திய சென்னையில் தலா ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வடசென்னையில் 5 போ், மத்திய சென்னையில் ஒருவா் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வடசென்னையில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) சாா்பில் ஜெ. செபஸ்டின், சுயேச்சை வேட்பாளராக இ.டில்லி கணேஷ், ஜி.மதன்குமாா், எம்.சீயோன்ராஜ், டி. கபிலன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். தென்சென்னையில் அறவோா் முன்னேற்றக் கழகம் சாா்பில் கோ.பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தாா். மத்திய சென்னையில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வெள்ளிக்கிழமை வரை 3 தொகுதிகளிலும் சோ்த்து 12 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா். அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறையை முன்னிட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெறாது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com