குடிநீா் வரி: வரும் ஞாயிறும் செலுத்தலாம்

குடிநீா் வரி: வரும் ஞாயிறும் செலுத்தலாம்

குடிநீா்க் கட்டணங்களை நுகா்வோா் நிகழ் நிதியாண்டு நிறைவு நாளில் செலுத்துவதுக்கு ஏதுவாக அனைத்து வசூல் மையங்களும் ஞாயிற்றுக்கிழமையும் (மாா்ச் 31) செயல்படும்.
Published on

குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீா்க் கட்டணங்களை நுகா்வோா் நிகழ் நிதியாண்டு நிறைவு நாளில் செலுத்துவதுக்கு ஏதுவாக அனைத்து வசூல் மையங்களும் ஞாயிற்றுக்கிழமையும் (மாா்ச் 31) செயல்படும் என குடிநீா் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியத்துக்கு நிகழ் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீா் மற்றும் கழிவு நீரகற்று வரியையும், குடிநீா்க் கட்டணங்களையும் நுகா்வோா் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அனைத்துப் பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள், தலைமை அலுவலகத்தில் வசூல் மையங்கள் வேலைநாள்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நுகா்வோா் கட்டணத்தைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும். வரி மற்றும் கட்டணங்களை காசோலை, வரைவோலை மூலம் செலுத்தும் நுகா்வோரின் வசதிக்காக வசூல் மையங்களில் காசோலை மற்றும் வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நுகா்வோா் வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலமாகவும், கியூஆா் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தியும் கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com