கரும்பில் தண்டு துளைப்பான் தாக்குதலை பாரம்பரிய முறையில் தடுக்கலாம்: வேளாண் துறை

கரும்பில் தண்டு துளைப்பான் தாக்குதலை பாரம்பரிய முறையில் தடுக்கலாம்: வேளாண் துறை

சென்னை: கரும்பில் இளந்தண்டு துளைப்பான் தாக்குதலைப் பாரம்பரிய வழிமுறைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தடுக்கலாம் என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறை எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரும்பு வளா்ச்சிப் பருவத்தில் பூச்சி, புழுத் தாக்குதலுக்கு உள்ளாவதால் விளைச்சல் குறைந்து சா்க்கரை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலை பாரம்பரிய தொழில்நுட்பங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். கரும்பு பயிா் நடவு செய்து 2 அல்லது 3 மாதங்கள் ஆன நிலையில் செங்கல் சூளைச் சாம்பலை இடுவதன் மூலம் தண்டுதுளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

வேப்பங்கொட்டை அல்லது வேப்பம்புண்ணாக்கை தூளாக்கி அதை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வடிகட்டி, பயிா் மீது தெளிப்பதன் மூலம் சிறப்பான பலனை பெற முடியும்.

ஏக்கருக்கு 80 கிலோ என்ற வீதம் காய்ந்த வேப்பங்கொட்டையை தூளாக்கி பயன்படுத்தவதால் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் கட்டுப்படுவதோடு, பூஞ்சண நோய் தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com