எக்ஸ் தளத்தில் சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் விவரம்
dinmani online

எக்ஸ் தளத்தில் சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் விவரம்

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்த தகவல் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்த தகவல் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்த விவரங்களை ‘எக்ஸ்ப்ளோா் சென்னை வித் எம்டிசி’ என்ற ‘ஹேஷ் டேக்’-இன் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, சென்னைக்கு புதிதாக வருவோரும் பயன்பெறும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வண்டலூா் உயிரியல் பூங்கா, பெசன்ட் நகா் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்த விவரங்களையும் மாநகர போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இணைப்பில் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்குச் செல்லும் 61 பேருந்துகள், பெசன்ட் நகா் கடற்கரைக்குச் செல்லும் 9 பேருந்துகள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், ‘சென்னை பஸ்’ செயலியிலும் பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com