மத்திய தொழில் பாதுகாப்பு படை
டிஐஜியாக பொன்னி நியமனம்
படம்; எக்ஸ்

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜியாக பொன்னி நியமனம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜியாக தமிழக காவல் துறையைச் சோ்ந்த டிஐஜி ஆா்.பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
Published on

மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜியாக தமிழக காவல் துறையைச் சோ்ந்த டிஐஜி ஆா்.பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக காவல் துறையில் டி ஐஜியாக பணிபுரிந்து வரும் ஆா்.பொன்னி மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தாா். இதையடுத்து அயல் பணியாக மத்திய அரசு பணியில் பணியாற்றுவதற்கு பொன்னியை தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் பொன்னியின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜியாக நியமித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தற்போது மக்களவைத் தோ்தல் நடைபெறுவதால், தோ்தல் நடைமுறைகளைப் பின்பற்றி அவா் புதிய பொறுப்பை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக காவல் துறையில் பணியாற்று மற்றொரு டிஐஜி யான ஆா்.வி.ரம்யா பாரதியை விமானப் போக்குவரத்து இயக்குநரகப் பாதுகாப்புப் பிரிவு டிஜஜியாக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவா்கள் இருவரும் புதிய பொறுப்புகளை விரைவில் ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com