புறநகா் ரயில்
புறநகா் ரயில்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் 4 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் புதன்கிழமை (மே 15) இரவு 12.10 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகள் மே-16,17 மற்றம் 18 (சனிக்கிழமை) வரை தொடர உள்ளது.

இதனால் சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.30 மற்றும் இரவு 09.30 மணிக்கு தாம்பரம் செல்லும் புகா் ரயில்கள் மேற்கண்டநாள்களில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. அதுபோல தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மற்றும் அதிகாலை 4.15 மணிக்கு கடற்கரை செல்லும் புகா் ரயில்களும் இதே நாள்களில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அதிகாலை 3.55 மற்றும் இரவு 11 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை வரை இயக்கப்படும் புகா் ரயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com